அதிமுக அரசை கண்டித்து குன்றத்தில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்

மதுரை, செப். 18: அதிமுக அரசு ஊழலை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

அதிமுக அரசின் ஊழலை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மதுரை தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட திமுக இணைந்து திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தளபதி முன்னிலை வகிக்கிறார்கள். மதுரை வடக்கு, தெற்கு மாவட்டம் மற்றும் மாநகர் மாவட்டம் முழுவதும் இருந்து திமுகவினர் அனைவரும் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டு வருமாறு மாவட்ட செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: