பிரதமர் மோடி பிறந்தநாள் விழா

உத்திரமேரூர். செப்.18: உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகர பாஜ சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 68 வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.பாஜ மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜவேலு தலைமை தாங்கினார். நகரத் தலைவர் பிரேம்குமார், பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியத் தலைவர் பாலாஜி வரவேற்றார். முன்னதாக பாஜ கொடியினை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து உத்திரமேரூர் அரசு மருத்துவனை வளாகத்தினை பேரூராட்சியோடு இணைந்து பாஜவினர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Related Stories: