நெல்லை மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா

தென்காசி, செப்.18:  தென்காசி, குற்றாலத்தில் அண்ணா சிலைக்கு திமுக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தென்காசியில் நகர திமுக சார்பில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு நகர துணை செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் சேக்பரீத், பால்ராஜ், அப்துல்கனி, பாலா முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் கோமதிநாயகம் மாலை அணிவித்தார். நகர நிர்வாகிகள் மோகன்ராஜ், முகம்மதலி, பட்டாணி, சந்திரன், ராம்ராஜ், ராமர், மகாலிங்கம், கிட்டு, காதர்அவுலியா, ஆறுமுகம், பரமசிவன், முருகன், சுப்பிரமணியன், வேல், ஐயப்பன், நல்லசிவன், ராம்துரை, இசக்கித்துரை, மைதீன்பிச்சை, கட்டியப்பா, டாக்டர் மாரிமுத்து, தேவதாஸ், குருசாமி, வக்கீல் செந்தூர்பாண்டியன், கோபால்ராம் உட்பட பலர் பங்கேற்றனர்.

குற்றாலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமையா என்ற துரை தலைமை வகித்து மாலை அணிவித்தார். மாவட்ட பொருளாளர் சேக்தாவூது, துணை செயலாளர் ஆயான்நடராஜன், முன்னாள் செயலாளர் ராஜாராம் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் இஸ்மாயில், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, முத்தையா, ராஜராஜன், செல்லத்துரை, முத்துவேல், சம்முகுட்டி, ஜீவானந்தம், நாகராஜ், சரவணா உட்பட பலர் பங்கேற்றனர். குற்றாலம் பேரூர் திமுக சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகுசுந்தரம் தலைமை வகித்து மாலை அணிவித்தார். பேரூர் செயலாளர் மந்திரம், கிட்டுபாண்டியன், ராஜாராம், சண்முகநாதன், கோபால், கருப்பசாமி, பேச்சிமுத்து, ஐயப்பன், ஜபருல்லாகான், ரவி, ராமர், ராம்ராஜ், வேல்சாமி, சிவனுபாண்டியன், காசிகிருஷ்ணன், கனகராஜ்முத்துப்பாண்டியன், வேல்ராஜ், வெள்ளத்துரை, முகம்மது இஷா, முத்துராஜ், சுரேஷ், சதீஷ்,குத்தாலிங்கம், சங்கரசுப்பிரமணியன், முருகன், பாலு, முத்து, சங்கர், கண்ணன், கோதர்மைதீன், சுப்பையா, கபிலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அமமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பண்டாரம் தலைமை வகித்து மாலை அணிவித்தார். பேரூர் செயலாளர் பரமசிவன், மாவட்ட நிர்வாகிகள் சண்முகசுந்தரம், வேல்பாண்டியன், நகர நிர்வாகிகள் கோட்டைச்சாமி, இசக்கிபாண்டி, ராஜேஷ், ஆறுமுகம் பங்கேற்றனர்.

அண்ணா திராவிடர் கழகம் சார்பில் நகர செயலாளர் உதயக்குமார் தலைமை வகித்து மாலை அணிவித்தார். மாவட்ட நிர்வாகிகள் கார்த்திகேயன், மணிகண்டன், பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் பிச்சையா, வெங்கடாச்சலம், காசி, துரைராஜ், பாலமுருகன், அரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

செங்கோட்டை: செங்கோட்டை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் அண்ணா 110வது பிறந்தநாளை முன்னிட்டு விஸ்வநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அண்ணா நலவாழ்வு அறக்கட்டளைக்கு கணினி வாங்க கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் வழக்கறிஞர்  ஆபத்துக்காத்தான் நிதியுதவி வழங்கினார். பின்னர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி பேசினார். அப்போது  விதவை என்னும் சொல்லை கைம்பெண் என்றும் ஊனமுற்றவர்கள் என்பதை மாற்றுத்திறனாளிகள் என்றும் அழைக்க வைத்தவர் கலைஞர் என்றும் மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்கு தனிவாரியம் அமைத்து  பல திட்டங்களை தந்தவர் கலைஞர் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலைஞர் தமிழச்சங்க நிர்வாகிகள் பெர்னாட்ஷா, சிவ இசக்கிமுத்து, ஜோதிமணி, நாட்டாண்மை ஆறுமுகம், பக்கிள் மாடசாமி, வினோத்குமார், பிச்சமுத்து, ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: