உச்சநீதிமன்ற புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு விருத்தாசலம் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், செப். 18: உச்சநீதிமன்றம் கொண்டு வரும் புதிய சட்டத்தை எதிர்த்து விருத்தாசலத்தில் ஒருநாள் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் அம்பேத்கர், வழக்கறிஞர் அருள்குமார், புஷ்பதேவன், சீனுவாசன், மணிகண்டராஜன், காசி விசுவநாதன், தரணி, ஜெயபிரகாஷ், கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் அசோக்குமார், கருணாநிதி, குபேரமணி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது, அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் புதியதாக சட்டம் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும். மேலும் வழக்கறிஞர்களின் தனி உரிமையை தட்டிப் பறிக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளது, எனவே இந்த சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: