பட்டாசு கடை வைக்க விண்ணப்பம் வரவேற்பு

கடலூர், செப். 18: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

தீபாவளி பண்டிகையின் போது கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளை கடைபிடித்து வரும் 28ம் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் வெடிமருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008ல் உள்ள விதி 84யை முறையாக கடைபிடித்து பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.  இதற்கு முந்தைய காலங்களில் தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள் தற்போது விண்ணப்பத்துடன் அப்போது பெற்ற உரிம நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் பிரதிகள் 5, கடையின் வரைபடம், மனுதாரரின் புகைப்படம் 2, மனுதாரர் உரிமம்கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் வீட்டுவரி ரசீது செலுத்திய நகல், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில் இடத்தின் பத்திர நகல் மற்றும் வீட்டுவரி செலுத்திய ரசீது நகலுடன் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: