மாணவர்களுக்கு பரிசு

கடலூர், செப். 18: கடலூரில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மஞ்சக்குப்பம் தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. தமிழ்த்துறை தலைவர் வனத்தையன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கவிதை போட்டியில் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவன் மணிகண்டன் முதல் பரிசும், குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி செல்வி தேவி இரண்டாம் பரிசும் பெற்றனர்.

கட்டுரை போட்டியில் தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் அரவிந்தன் முதல் பரிசும், குமராபுரம் கிருஷ்ணசாமி மகளிர் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரி மாணவி வினிதா இரண்டாம் பரிசும் பெற்றனர். பேச்சு போட்டியில் குமராபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவன் செல்வமணி முதல் பரிசும், வடலூர் ஏரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி கலைவாணி இரண்டாம் பரிசும் பெற்றனர். பரிசு தொகையான ரூ.10000, ரூ.7000க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை தூய வளானர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் பீட்டர் ராஜேந்திரம் வழங்கினார்.

Related Stories: