செல்போனில் பேசியவர்கள் கலக்கம் பெண் போலீசிடம் சிக்கிய சிம்கார்டில் ஆய்வு: வேலூர் பெண்கள் தனிச்சிறையில்

வேலூர், செப்.18: வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பெண் போலீசிடம் சிக்கிய சிம்கார்டில் பேசியவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பணியாற்றும் 2ம் நிலை காவலர் திலகவதி(54) கடந்த 15ம் தேதி காலை பணிக்கு வந்தார். அப்போது நுழைவாயிலில் இருந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். இதில் அவர் செல்போனை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவரை தனி அறைக்கு அழைத்து சென்று பெண் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, ஒரு சிம்கார்டு சிக்கியது. சிறைக்குள் செல்போன் கொண்டு சென்றதால், திலகவதியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி ஜெயபாரதி உத்தரவிட்டார். இதுகுறித்து சிறை அலுவலர் அல்லிராணி கொடுத்த புகாரின்பேரில், பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் பெண் போலீஸ் திலகவதியிடம் சிக்கிய சிம்கார்டில் இருந்து பேசியவர்களை போலீசார் பட்டியலிட்டுள்ளர். அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதோடு, திலகவதியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதன் மூலம் வேலூர் சிறையில் செல்போன் பயன்படுத்தியவர்கள் சிக்க வாய்ப்புள்ளது. இதனால், பலர் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories: