4கேஸ் மானியம், முதியோர் உதவி தொகை தபால் நிலைய வங்கி மூலம் வினியோகம்

நாகர்கோவில், செப்.18 : அஞ்சல் அலுவலகங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்ற பெயரில் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 1ம்தேதி பிரதமர் மோடி நாடு முழுவதும் இதை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி புதிய சேமிப்பு கணக்குகளை ஆதார் எண், பான்கார்டு எண் மற்றும் கைரேகை பதிவுடன் பயோமெட்ரிக் முறையில் 5 நிமிடங்களில் இதில் தொடங்கி விட முடியும்.  குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகம், நாகர்கோவில் டவுன் துணை அஞ்சலகம், மருங்கூர் துணை அஞ்சலகம், இரவிப்புதூர் கிளை அஞ்சலகம் மற்றும் குமாரபுரம் தோப்பூர் கிளை அஞ்சலகம் ஆகிய 5 அஞ்சல் அலுவலகங்களில் இந்த சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இந்த சேவையின் மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்பெறும் வகையில் வங்கி கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று தபால் நிலையங்களில் நடந்தது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நடந்த சிறப்பு முகாமை, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வி.பி. சந்திரசேகர் தொடங்கி வைத்து பேசியதாவது: வங்கி சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலுக்கே வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் வங்கி கணக்கு தொடங்குவது மிகவும் எளிது.  எந்த முன் பணமும் தேவையில்லை. வங்கி கணக்கு தொடங்கியவுடன் க்யூ ஆர் கார்டு உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். இந்த கார்டு மூலம் தபால்காரர்களிடம் வீட்டில் இருந்த படியே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இதனால் வங்கிக்கு வர வேண்டும். ஏ.டி.எம். மையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. தபால் நிலையங்களில் வங்கி சேவைக்காக தனி கவுண்டர் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த வங்கி சேவையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.  எதிர்காலத்தில் கேஸ் மானியம், முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலை திட்ட சம்பளம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய தொகைகள் இந்த வங்கி கணக்கில் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தபால் நிலைய வங்கி சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நெட்வொர்க் பிரச்னை குமரி மாவட்டத்தில் கடந்த 1 ம்தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 1,500 பேர் வங்கி கணக்கில் இணைந்துள்ளனர். நேற்று தொடங்கிய சிறப்பு முகாம் 22ம்தேதி வரை நடக்கிறது. நேற்று முதல் நாள், நாகர்கோவில் தலைமை தபால் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு கவுண்டரில் ஏராளமானவர்கள் வங்கி கணக்கு ெதாடங்கினர். இடையில் நெட்வொர்க் இணை

ப்பு கிடைக்காததால் வங்கி கணக்கு தொடங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Related Stories: