நாகர்கோவிலில் வக்கீல்கள் வேலை நிறுத்தம் - ஊர்வலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய கோரி கலெக்டரிடம் மனு

நாகர்கோவில்: வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, நாகர்கோவிலில் நேற்று வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்து, ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர். வக்கீல்கள் வேலை நிறுத்தம் எதுவும் செய்யக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். உயர் கல்வி ஆணைய சட்டத்தை திரும்பப்ெபற வேண்டும். வக்கீல்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின் அவர்களுக்கு எந்த அரசு பொறுப்புகளையோ, பணிகளையோ வழங்கக்கூடாது என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு - பாண்டிச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மாவட்ட  கலெக்டர், அமைச்சர்கள், எம்.பி.க்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்ட வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்தது. அதன்படி நேற்று காலை நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டனர். எஸ்.எல்.பி. பள்ளி, டதி ஸ்கூல் வழியாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையொட்டி நேற்று வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். இந்த ஊர்வலத்துக்கு, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜோஸ் பெனடிக்ட் தலைமை வகித்தார். பூதப்பாண்டி வக்கீல்கள் சங்க தலைவர் பலவேசமுத்து, இரணியல் வக்கீல்கள் சங்க தலைவர் புஷ்பதாஸ், பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் தினேஷ், குழித்துறை வக்கீல்கள் சங்க தலைவர் சுரேஷ் மற்றும் அந்தந்த வழக்கறிஞர்கள் சங்கங்களின் செயலாளர்கள், நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்களும் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தில் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர்கள், மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஊர்வலத்தை தொடங்கி வைத்து, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜோஸ் பெனடிக்ட் கூறுகையில், வழக்கறிஞர்கள் உரிமையை நசுக்கும் வகையில் உச்சநீதி மன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதிகளுக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை என்பதற்காக, கவர்னர் அளித்த தேநீர் விருந்தை, நீதிபதிகள் புறக்கணித்தனர். உரிமையை நிலை நாட்ட அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் வழக்கறிஞர்களை போராடக் கூடாது. வேலை நாட்களில் வழக்கறிஞர்கள் யாராவது இறந்தால், அவர்களின் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என்றலெ–்லாம் உத்தரவிடுவது முறையாகாது. எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

Related Stories: