கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு

கன்னியாகுமரி செப் 18: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நீதிபதிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்கர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீதிபதிகள் நேரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் படி இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற கோயில்களில் ஓன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை நேரில் ஆய்வு நடத்த மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி கருப்பையா, தலைமை குற்றவியல் நடுவர் பாண்டியராஜ் ஆகியோர் கோயிலுக்கு வந்தனர்.

கோயில் உட்பிரகாரம், மூலஸ்தான வெளிபிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை நேரில்ஆய்வு நடத்தினர். இதில் கோயில் மேலாளர் சிவராமசந்திரன், தலைமை கணக்கர் ராமச்சந்திரன் மற்றும் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆய்வின் போது, நீதிபதிகள் கோயிலுக்கு வரும்முதியவர்கள் வரிசையில் நிற்காமல் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

Related Stories: