அறந்தாங்கியில் கழிவுநீரை சாலையில் திறந்து விட்ட குடியிருப்புவாசிக்கு ரூ.2,000 அபராதம் நகராட்சி நடவடிக்கை

அறந்தாங்கி, செப்.12:  அறந்தாங்கி நகரில் குடியிருப்பில் இருந்து வெளியாகும் கழிவு நீரை சாலையில் திறந்துவிட்ட குடியிருப்பு உரிமையாளருக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.2 ஆயிரம் விதித்தது.  அறந்தாங்கி மணிவிளான் தெருவில் வசித்து வருபவர் ராஜாமுகமது. இவருக்கு சொந்தமான குடியிருப்பில் இருந்து கழிவு நீர் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் திறந்துவிடப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும்,  குடியிருப்பு குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாததால், தொட்டியில் கொசுப்புழு இருப்பதாகவும் அறந்தாங்கி நகராட்சிக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ஆணையர் உத்தரவின்படி, சுகாதாரப்பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  ஆய்வில் அவரது குடியிருப்பில் இருந்து கழிவு நீர் சாலையில் வெளியேறுவதை பார்த்து அவற்றை உடனடியாக நகராட்சி பணியாளர்கள் மூலம் தண்ணீர் வெளியேறாமல் நிறுத்தினர். இதைத் தொடர்ந்து கொசுப்புழுக்களையும் நகராட்சி சுகாதாரப் பிரிவினர் அழித்தனர். மேலும் நகரில் சுகாதாரக் கேடு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதால் ராஜாமுகமதுவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Related Stories: