இவ்வாறு அவர் கூறினார். டிஎஸ்பி எச்சரிக்கை நாளை விநாயகர் சதுர்த்தி பெரம்பலூரில் 51 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை

பெரம்பலூர்,செப்.12: நாளை (13ம்தேதி) விநாயகர்சதுர்த்தியையொட்டி பெரம்பலூர் நகராட்சியில் 51 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மாவட்ட அளவில் 122இடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நாளை (13ம்தேதி) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசின் சார்பாக காவல்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள விதிமுறை களைப் பின்பற்ற வேண்டும்.பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கணக்கின்படி, பெரம் பலூர் நகராட்சியில் 51இடங்களிலும், பெரம்பலூர் மாவட்ட அளவில் 122 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிகோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் லெப்பைக்குடிகாட்டில் வைக்கப்படும் சிலைமட்டும் வெங்கல சிலையாகும். ரசாய வர்ணம்பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படியே கரைக்க அனுமதிக்கப்படும் என பெரம்பலூர்மாவட்ட காவல்துறை சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: