நாகை எஸ்பி அலுவலகத்தில் விநாயகர் சிலைகள் வைப்பது ஊர்வலம் குறித்த ஆலோசனை

நாகை, செப். 12: நாகை எஸ்பி அலுவலகத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக விழா குழுவினர்கள் விதிமுறை கடைபிடிப்பது குறித்த ஆலோசனை சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.

நாகை எஸ்பி விஜயகுமார் தலைமை வகித்து பேசினார். அப்போது வரும் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை பல்வேறு நாட்களில் விநாயகர் சிலை வைப்பது மற்றும்  ஊர்வலம் நடக்கும்போது நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற வழிமுறைபடி சிலைகள் வைப்பது, சிலையை பாதுகாப்பது, சிலை ஊர்வலமாக எடுத்து செல்லும் வழிகள், ஊர்வலம் கடக்கும் வழிப்பாட்டு தலங்கள் மற்றும் ஊர்வலத்தின்போது செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசினார். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆரோக்கியம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: