கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருத்துறைப்பூண்டி செப்.12: திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை நடத்திய 15வது சுற்று கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் முகாம் குன்னூர், குரும்பல், மணலிஊராட்சிகளில் கால்நடைஉதவி மருத்துவர் காவ்யா தலைமையில்   நடைபெற்றது.

இதில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 900 கால் நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர்.  இதுவரை ஒன்றிய நகர பகுதிகளில் 6000 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது என்று கால்நடை பராமரிப்பு துறை உதவிஇயக்குநர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Stories: