விதை பந்துகள் தயாரிக்கும் ஆயிப்பேட்டை கிராம மக்கள்

நெய்வேலி, செப். 12:மழை வளம் வேண்டியும், மாணவர்களுக்கு மரம் நடுவது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மர விதை பந்துகளாக செய்து கால்வாய், ஏரிகள், ஓடைகள், குட்டைகள் என எல்லா இடங்களிலும் விதை பந்துகளை விதைப்பது மூலமாக மரங்களை உற்பத்தி செய்யும் பணியில் பல கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல் நெய்வேலி அடுத்த ஆயிப்பேட்டை கிராமத்தில் மக்கள் விதை பந்துகளை உருவாக்கி வருகின்றனர்.இதுகுறித்து சமூக நல ஆர்வலர் மணிகண்டன் கூறியதாவது:

கடந்த காலங்களில் பறவையினங்கள் பழங்களை உண்டு அதன் விதைகளை எச்சத்தின் மூலம் விதைத்து வந்தன. தற்போது பறவை இனங்கள் பெருமளவு அழிந்து விட்டன. அதனால் பல தரப்பட்ட மர விதைகளை பந்துகளாக செய்து பள்ளி மாணவர்கள் மூலமாக விதைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு மரம் நடுவது சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்றார்.

Related Stories: