விஷம் குடித்து வாலிபர் சாவு

விருத்தாசலம், செப். 12: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கடந்த மாதம் 7ம் தேதி உடல்நல  குறைவால் மறைந்தார். இந்த செய்தி கேட்ட கடலூர் மேற்கு  மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியம் டி.புடையூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பாலையா(39) என்பவர் அதிர்ச்சியில் இறந்தார். இது குறித்த தகவலறிந்த நல்லூர் ஒன்றிய செயலாளரும் மாவட்ட பொருளாளருமான பாவாடை கோவிந்தசாமி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ.வுக்கு தகவல் அளித்தார். இதுகுறித்து மாவட்ட செயலாளர் கணேசன் திமுக தலைமைக்கு தகவல் அளித்தார்.    

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட செயலாளர் கணேசன் எம்எல்ஏ, பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி ஆகியோர் பாலையா மனைவி அஞ்சலையிடம் திமுக தலைமை அறிவித்த ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.  அப்போது, ஒன்றிய துணை செயலாளர் மரிமுத்தாள் குணா, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ரகுநாதன், வணிகர் அணி துணை செயலாளர் செந்தில், தொண்டர் அணி துணை செயலாளர் ராஜிவ்காந்தி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர்கள்  பாபு, தனசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவலிங்கம், திருஞானசம்பந்தம், ஊராட்சி செயலாளர் பாலசுந்தரம் மற்றும் சாமிக்கண்ணு, விஜியாபுரி, ராஜவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: