இருள் சூழ்ந்து இருக்கும் பாலம் 3 மாவட்ட மக்கள் பாதிப்பு

திட்டக்குடி, செப். 12: திட்டக்குடி பேரூராட்சியில் கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் திமுக ஆட்சியில் சுமார்ரூ.13 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் இருளாக இருந்ததால் சமூக விரோத செயல்கள், திருட்டு, கொலை, கொள்ளை, மணல் திருட்டு உள்ளிட்ட பல சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தது.இது குறித்து தினகரன் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அப்போதைய திட்டக்குடி எம்எல்ஏ தமிழ்அழகன் தொகுதி நிதியில் இருந்து சுமார் ரூ.22 லட்சம் மதிப்பில் சோலார் மின்விளக்கு அமைத்து கொடுத்தார்.

சோலார் மின்விளக்குகளை பராமரிக்காமல் இருந்ததால் பேட்டரிகள், பல்புகள் திருடப்பட்டது. இதனை பராமரிக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் காட்டியதால் அனைத்து சோலார் மின் விளக்குகளும் எரியாமல் போனது. இதனால் மீண்டும் இருள் சூழ்ந்த பாலத்தில் சமூக விரோத செயல்கள் தலை தூக்கியுள்ளது. எனவே அனைத்து சோலார் மின் விளக்குகளையும் எரிய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர், பெரம்பலூர் மாவட்ட போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: