தபால் நிலையங்களில் 2ம் கட்டமாக வங்கி சேவை தொடங்க அறிக்கை அதிகாரிகள் தகவல்

ேவலூர், செப்.12: நாடு முழுவதும் தபால் நிலையங்களில் 2வது கட்டமாக வங்கி சேவை தொடங்க அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியா முழுவதும் 1 லட்சத்து 56 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 94 தலைமை தபால் நிலையங்கள் உட்பட 12 ஆயிரத்து 185 தபால் நிலையங்கள் உள்ளன. தபால் அலுவலகங்களில் தபால் மற்றும் பார்சல் சேவையுடன் வங்கி சேவைகளுடன் கூடிய ஏடிஎம் வசதி, பாஸ்போர்ட் பெறும் வசதி என தொடங்கப்பட்டுள்ளது.முன்பு தபால் நிலையங்களில் மக்கள் நேரடியாக சென்று தங்களது பணத்தை எடுக்க, அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதேபோல் சேமிப்பு கணக்கு தொடங்கவும் பல நாட்கள் ஆகும். இப்படி அஞ்சலகங்களில் உள்ள பிரச்னைகளை போக்க தபால்துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. அனைத்து நடவடிக்கைகளும் கணினி மயமாக்கப்பட்டு, விரைவான சேவையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் முதல்கட்டமாக 3,250 தபால் நிலையங்களில் வங்கி சேவை தொடங்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் முதல்கட்டமாக 185 தபால் நிலையங்களில் இந்த வங்கி சேவை கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே அனைவருக்கும் வங்கி சேவை மற்றும் வங்கி கணக்கு இருக்க வேண்டும்.மேலும், புதியதாக வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதுமானது. வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை. வீட்டிலேயே இருந்துகொண்டு வங்கி சேவை தொடங்க விருப்பம் உள்ளவர்கள் தபால்காரர்கள் கொண்டுவரும் செயலி மூலம் தங்களின் ஆதாரை கொடுத்துகூட கணக்கை தொடங்க முடியும்.

இதற்கிடையில் 2வது கட்டமாக தபால் நிலையங்களில் வங்கி சேவை தொடங்குவதற்கான பணிகளை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதிகளவில் பணபரிவர்த்தனை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் வங்கிகளை தேர்ந்தெடுத்து அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து தபால்துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்தியா முழுவதும் தபால்துறை வங்கி சேவையை அனைவரிடமும் கொண்டுசெல்லும் வகையில் அஞ்சல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை வைத்து வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிகளில் கிடைக்க கூடிய அனைத்து வசதிகளும் தபால் நிலையங்களில் கிடைக்கிறது.

மிஸ்டு கால் கொடுத்தால் வாடிக்கையாளர்களின் இருப்பு விவரங்கள் என அனைத்து உடனுடன் கிடைக்கிறது. முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 185 தபால் நிலையங்களில் வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது. 2வது கட்டமாக தலைமை தபால் நிலையங்கள் மற்றும் முக்கிய தபால் நிலையங்களில் அதிக வருவாய் கொண்டவை குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையின் மூலம் ஓரிரு மாதங்களில் வங்கி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: