சேலத்தில் 47 மி.மீ. மழை

சேலம், செப்.11: தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கோடை போல் வெயில் கொளுத்தி வந்தது. இதனால் வீடுகளில் கடும் புழுக்கம் ஏற்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் தவித்தனர். சேலத்தில் கடந்த வாரம் 8ம் தேதி அதிகபட்சமாக 99.5 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதேபோல் நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கோடை போல் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று காலை சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இந்த மழையானது 47 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. தம்மம்பட்டி 25.2, வாழப்பாடி 10, பெத்தநாயக்கன்பாளையம் 6, கரியகோயில் 3, ஏற்காடு 2.4, ஆணைமடுவு 1, சேலம் நகர் 0.2 மில்லி மீட்டர் என்ற அளவில் பதிவாகி உள்ளது.

Related Stories: