2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு அழைக்கப்பட்ட 500 பேரில் 233 பெண்கள் புறக்கணிப்பு

சேலம், செப்.11: தமிழக காவல்துறை, சிறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. சேலம், மாநகரம், நாமக்கல் மாவட்டங்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப் பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் நாள் ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 274 பேர் வரவில்லை. 2வது நாள் 950 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 308 பேர் வரவில்லை.

இந்நிலையில், நேற்று 500 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 233 பேர் வரவில்லை. வந்தவர்களுக்கு நீளம் தாண்டுதல், ஓட்டம், மார்பு அளவு அளத்தல், உயரம், கயிறு ஏறுதல் போன்ற உடற்தகுதி நடந்தது. முறைகேடுகள் எதுவும் நடக்காத வகையில் டிஐஜி செந்தில்குமார், சேலம் எஸ்பி ஜோர்ஜி ஜார்ஜ் ஆகியோர் தலைமையிலான  குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: