மருந்தாளுநர்கள் போராட்டம்

சேலம், செப்.11: தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கம் சார்பில், சேலம் சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம்  நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வாசு தலைமை வகித்தார். மாநில செயலாளர் முத்துக்குமரன் பேசினார். கூட்டத்தில், காலியாக உள்ள 350க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கியதை நிரப்ப வேண்டும். 42 துணை இயக்குநர் சுகாதார பணிகள் மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில், நிர்வாகிகள் சுகுமார், கிரிராஜன், கேசவமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

Related Stories: