சாலை விரிவாக்க பணிக்காக பழமை வாய்ந்த மரங்கள் அகற்றம்

பொங்கலூர், செப். 11:பல்லடம்-மங்கலம் சாலை விரிவாக்க பணிக்காக பழமை வாய்ந்த மரங்கள் நேற்று வெட்டி அகற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மங்கலம் நெடுஞ்சாலை விரிவாக்க பணி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்டமாக மங்கலம் சாலையிலுள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது. வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை, காவல்துறை ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.  இந்நிலையில் நேற்று காலை வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மேற்பார்வையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போக்குவரத்து காவல் நிலையம் முன்பு இருந்த வேம்பு, சவுக்கு உள்ளிட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டன.

Related Stories: