வைகை அணைப் பகுதியில் தேனி மாவட்ட எஸ்.பி ஆய்வு

ஆண்டிபட்டி,செப்.11: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடத்தை மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் ஆய்வு செய்தார்.

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று சிலைகளை ஆறு, கடல் உள்ளிட்ட இடங்களில் கரைக்கின்றனர்.அதன் அடிப்படையில் ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா சில கிராமங்களில் இருந்து லாரிகள் மூலமாக 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை கொண்டு வந்து வைகை அணைப் பகுதியில் கரைப்பது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1980 கனஅடிதண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுவதால், ஆற்றில் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக செல்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் சிலை கரைக்கும் பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் வாகனங்களிலிருந்து சிலைகளை எவ்வாறு பாதுகாப்பாக இறக்குவது, மின் விளக்குகள் அமைப்பது, தீயணைப்பு மீட்பு குழுவினரை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை செய்தார்.இந்த ஆய்வின் போது காவல் ஆய்வாளர் பாலகுரு, சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: