குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ஊராட்சிகளுக்கு அறிவுரை

கோவை, செப்.11: கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, 285 ஊராட்சி பகுதியில் சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2, பவானி, ஆழியாறு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

 கோவை நகரம், புறநகர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. கேரளா மாநிலத்தை தொடர்ந்து எலி காய்ச்சல் கோவையிலும் பரவி வருகிறது. 20க்கும் மேற்பட்டவர்கள் எலி காய்ச்சல் பாதிப்பில் இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில், குடிநீர் தொட்டிகளில் எலி, அணில் போன்றவற்றின் சிறுநீர் கலந்திருந்தால் எலி காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

 எனவே, எலி காய்ச்சலை தடுக்க பேரூராட்சி, ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலமாக உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டி, தரை மட்ட தொட்டிகளை நன்றாக பராமரிக்கவேண்டும். நீர் தொட்டிகளில் எலி உள்ளதா, இறந்த நிலையில் எலி கிடக்கிறதா என பார்க்கவேண்டும். எலி நடமாட்டம் உள்ள நீர் தொட்டிகளை சிமெண்ட் கலவை மூலமாக அடைக்கவேண்டும். எலிகளை பிடிக்க பொறி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நோய் பரவும் நிலையில் நீர் தொட்டிகளை பராமரிக்கும் உள்ளாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: