ஆட்டோ ஓட்டுநர்கள் கலெக்டரிடம் மனு

கோவை, செப்.11: புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்டோ ெதாழிலாளர் சங்கம், கோவை ஜில்லா ஆட்டோ மற்றும் மேக்சிகேப் வேன் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் ஏஐடியுசி மாவட்ட தலைவர் பழனிசாமி, சிஐடியு பொது செயலாளர் சுகுமார் ஆகிேயார் தலைமையில் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  பின்னர், நிர்வாகிகள் கலெக்டர் ஹரிஹரனை சந்தித்து ேகாரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சித்ரா, காளப்பட்டி, சரவணம்பட்டி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தெற்கு ஆர்.டி.ஓ அதிகாரிகள் மூலம் புதிய ஓட்டுனர்களை கொண்ட ஆட்டோக்களை ஸ்டாண்டில் நிறுத்த திட்டமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 இதை தொடர்ந்து தற்போது ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில்பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்ேதாடு, இந்த வழித்தடத்தில் ஐந்து பஸ்களின் இயக்கத்தை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் துவக்கப்பட்டுள்ளது. சித்ரா-காளப்பட்டி-சரவணம்பட்டியை மையப்படுத்தி இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் செயல்பட்டு வந்த ஆட்டோ, மேக்சிகேப் ஓட்டும் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இருகூர் நகரக்கிளையின் நிர்வாகிகள், அதன் செயலாளர் வீராசாமி தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் நேற்று ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

திருச்சி சாலையில் இருந்து இருகூர் மார்க்கெட்டிற்கு செல்லும் இணைப்புச்சாலையாக இந்த சாைல உள்ளது. இங்கு வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதையாக அமைக்காமல், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு நடந்து செல்பவர்கள் மட்டுமே செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இங்கு சுரங்கப்பாதையை வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: