போக்குவரத்து தொழிலாளர்கள் 27 பேர் வழக்கிலிருந்து விடுதலை

கோவை, செப்.11: கடந்த 2014ம் ஆண்டு நடந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை  சேர்ந்த 27 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.   தமிழ்நாடு போக்குவரத்து கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊதிய உயர்வு கோரி, தொழிலாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி, தொடர் வேலை நிறுத்தம் மேற்கொண்டு மறியல் செய்தனர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை (தொமுச) சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 27 பேர் மீது உக்கடம் போலீசார் வழக்கு பதிந்தனர். இது தொடர்பான வழக்கு கோவை நீதித்துறை நடுவர் எண் 3ல் நடந்தது. இதில் தொழிற்சங்கம் தரப்பில் முன்னாள் அரசு வக்கீல் அருள்மொழி வாதாடிவந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில், 27 பேரும் நிரபராதிகள் என்றும், அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், 27 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். மீதமுள்ள 25 பேர் விடுதலையாகியுள்ளனர்.

Related Stories: