கோவை மாநகராட்சியில் எலிக்காய்ச்சலை தடுக்க 40 மருத்துவ முகாம்

கோவை, செப்.11: கோவை மாநகராட்சி பகுதியில் 3,500க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது. சுமார் 4.50 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கேரளாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் கேரளா சென்ற கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எலிக்காய்ச்சல் ஏற்பட்டு இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து எலிக்காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: எலிக்காய்ச்சல் எனும் நோய் ஸ்பைரோகிட் எனும் பாக்டீரியா வகையை சேர்ந்த கிருமிகளால் மனிதன் மற்றும் விலங்கினங்களுக்கு வரக்கூடிய நோயாகும்.

நோய்தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் மூலம் மற்றும் இந்த சிறுநீரால் மாசுபட்ட நீர், நிலம், உணவு பொருட்கள் மூலம் பரவுகிறது. உடலில் ஏற்பட்டுள்ள சிறுகாயங்கள், வெட்டுக்கள், சிராய்ப்புகள் மற்றும் கண், மூக்கு, வாய் வழியாகவும் இக்கிருமிகள் உடலில் புகுந்து இந்நோயை உண்டாக்குகிறது.  பெரும்பாலும், நீர் மாசுபடுவதால் இந்நோய் ஏற்படுகிறது. சுகாதாரமற்–்ற இடங்களில் பணிபுரிபவர்கள், துப்புரவு மற்றும்் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியாளர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், தேங்கிய நீர்நிலைகளில் மீன் பிடிப்பவர்கள், விவசாய தொழில் சார்ந்தவர்கள், கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் போன்றறோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். தாங்களாக கடையில் மருந்து வாங்கி சாப்பிடுதல் கூடாது. மருத்துவ பரிசோதனை மூலமே எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படும்.

மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் எலிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் யாரும் கண்டறியப்படவில்ைல. மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தொடர் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: