கோட்டைமேடு பள்ளியில் சட்டக்கல்வி மன்றம் திறப்பு

கமுதி, செப்.11: ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கமுதி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கமுதி கோட்டைமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டக்கல்வி மன்றம் திறந்து வைக்கப்பட்டது.  மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி திறந்து வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் நம்பிராஜன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அளித்த கம்ப்யூட்டர், புத்தகங்கள், டேபிள், சேர்கள் மன்றத்திற்கு வழங்கப்பட்டன.

முதன்மை நீதிபதி கயல்விழி பேசுகையில், ‘‘சிறுவயதில் செய்யக்கூடிய தவறுகள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு, நல்வாழ்க்கை அனைத்தையும் பாதிப்படையச் செய்கிறது.  எனவே கவனத்துடன் படித்து முன்னேற வேண்டும்’’ என்றார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் பஞ்சு, வழக்கறிஞர்கள் முத்துராமலிங்கம், அய்யாத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.  முதுநிலை நிர்வாக உதவியாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories: