பெரம்பலூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர்,செப்.11: பெரம்பலூரில் நடந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணியை. கலெக்டர் சாந்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.   பெரம்பலூர் கலெக்டர்அலுவலக நுழைவுவாயிலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்துக் குழுமம் தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப் படுவதையொட்டி, கலெக்டர் சாந்தா ஊட்டச் சத்து விழிப்புணர்வுப் பேரணியை பாலக்கரையிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.  இப்பேரணியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டப் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு தொடர்பான உணவுப்பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் சாந்தா திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், ஊட்டச்சத்து மாத உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய்அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தர், வருவாய்கோட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: