வேளாண் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, தர்ணா போராட்டம்

பெரம்பலூர்,செப்.11: வாலிகண்ட  புரத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக கெடுபிடிகளைக் கண்டித்தும், தற்கொலை செய்துகொண்ட மாணவர் பிரச்னைக்கு தீர்வுகாணவும் வலியுறுத்தி ரோவர் வேளாண்மைக் கல்லூரி மாணவ,மாணவி யர் 2வது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணாப் போராட்டம்.    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியிட்டுள்ள உத் தரவுகளின்படி, அரியர் வைத்திருந்தால், அடுத்த ஆண்டு அந்த மாணவர் கல்விபயில செல்லமுடியாது. இதுபோன்ற கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் கடந்த 7ம்தேதி நாமக்கல் மாவடத்திலுள்ள வேளாண்மைக் கல்லூரியில் படித்த தர்ம புரியைச் சேர்ந்த மாணவர் தீபக் தற்கொலை செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து 7ம்தேதியே தமிழக அளவிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மாணவ,மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டங்களில் ஈடுபட்ட னர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் அருகேயுள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சர் அண்டு ரூரல் டெவலெப்மெண்ட் எனப்படும் வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் கடந்த 7ம்தேதியே வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வெளியே சென்றனர்.     

 இந்நிலையில் 2ம்நாளான நேற்று முதலாம்ஆண்டு, 2ம்ஆண்டு, 3ம்ஆண்டு என 3 வகுப்புகளைச் சேர்ந்த 190 மாணவ,மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து வெளி யேறினர். அவர்கள் அனைவரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கெடுபிடிகளைக் கண்டித்து கோஷமிட்டவாறு கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்துபோன நாமக்கல் கல்லூரி மாணவர் தீபக் மரணத்திற்கு தீர்வுகாணவேண்டி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதில் பல்கலைக்கழக நிர்வாகம் மாநிலஅளவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாத பட்சத்தில் இன்றும் வகுப்புகள் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், தர்ணாப் போராட் டங்கள் தொடருமென கல்லூரி மாணவர்அமைப்பு சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் மாணவர்கள் சாப்பிடாமல் ஈடுபட்டதால் கல்லூரி வளாகத்தில் நேற்று முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது.

Related Stories: