அரியலூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 262 மனுக்கள் குவிந்தன

அரியலூர், செப்.11:  அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி, தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 262 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனே நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.பின்னர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று இம்மனுக்களின் மீது உடனே நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், டிஆர்ஓ தனசேகரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பூங்கோதை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: