பொன்னமராவதியில் பாஜ நிர்வாகிகள் கூட்டம்

பொன்னமராவதி, செப். 11: பொன்னமராவதியில் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகா சக்திகேந்திரம், சக்திகேந்திரம் மற்றும் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தொகுதி அமைப்பாளர் ஜெயம் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சேதுபதி முன்னிலை வகித்தார். ராமேஸ்வரம் கோட்ட பொருப்பாளர்  சண்முகராஜா, மாவட்ட செயலாளர் ஜெயம்சுப்பிரமணியன், சிவகங்கை மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், மாநில நெசவாளர் அணி தலைவர் பாலமுருகன், தொகுதி பொருப்பாளர் முரளிதரன், நவமணி ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் வடமலை, சிவகுமாரிராசு, ரகுபதி, லோகநாதன், நிஜாம், லோகநாதன், செந்தில்குமார், சக்திவேல், ராஜ்குமார், மாதவன் மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னதாக நகர தலைவர் சேதுமலையாண்டி வரவேற்றார். ஒன்றிய தலைவர் சேது நன்றி கூறினார்.

Related Stories: