அரசு நிதியுதவி பள்ளியில் நடைபெறும் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் ராணிப்பேட்டையில் பரபரப்பு

வாலாஜா, ெசப். 11: அரசு நிதியுதவி பள்ளியில் நடைபெறும் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டையில் அரசு நிதி உதவி பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் உள்ளிட்ேடார் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி மாவட்ட தலைவர் மணி தலைமையில் பல்வேறு பள்ளியில் பணியாற்றும் 12 ஆசிரியர்கள் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

அப்போது, அங்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி மணிவண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேற்படி அரசு நிதியுதவி பள்ளி மீது தெரிவிக்கப்பட்ட புகார்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த உள்ளிருப்பு போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: