தி காவிரி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சங்க தொடக்க விழா, கருத்தரங்கம்

சேலம், செப்.9: தி காவிரி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சங்க தொடக்க  விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர் தோபிக்அகமது வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக, சேலம் உருக்காலை முதுநிலை மேலாளர்  (இயந்திரவியல்) பொறியாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசினார். பொறியியல் கல்லூரிகளின் டீன் ஓபுளி, முதல்வர் துரைசாமி மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் பெஞ்சமின் லாசரஸ் ஆகியோர், சிறப்பு விருந்தினரை கவுரவித்தனர்.   டீன் ஓபுளி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் துரைசாமி பேசுகையில், ‘அரசு மற்றும் தனியார் துறைகளில் குவிந்து கிடக்கும் இயந்திரவியல் துறை வேலை வாய்ப்புகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’ என்றார்.  

 

சிறப்பு விருந்தினர் சண்முகம் பேசுகையில், ‘இயந்திரவியல் துறையில் உள்ள அரசு வேலைவாய்ப்பினை அடைவதற்கான வழிமுறைகளை கொள்ள வேண்டியதும் அவசியம்,’ என்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு, கல்வி நிறுவனங்களின் கௌரவ தலைவர் நடேசன், துணை தலைவர் மதன்கார்த்திக், தலைவர் அன்பழகன், செயலாளர் இளங்கோவன், தாளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், செயல் இயக்குநர் கருப்பண்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மாணவர் ஜோதிலிங்கம் நன்றி கூறினார். சங்க நிர்வாகிகளை உதவி பேராசிரியர் ஜமுனா அறிமுகப்படுத்தினார். கருத்தரங்க ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் துரைசிவம் செய்திருந்தார். 

Related Stories: