இமானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி செலுத்த செல்ல சொந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதி கலெக்டர் சிவஞானம் தகவல்

விருதுநகர், செப். 7: விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பரமக்குடியில் செப்.11ல் தியாகி இமானுவேல் சேகரன் 61வது நினைவு நாள் அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடம்  மற்றும் சட்ட, ஒழுங்கு கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்:

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தியாகி இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டும் செல்ல வேண்டும். இருசக்கரம், டிராக்டர், டாடா ஏஸ், சைக்கிள் உள்ளிட்டவற்றில் செல்ல அனுமதியில்லை.

சொந்த வாகனங்களில் செல்ல எஸ்பி அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் செப்.9ம் தேதிக்கு முன்பாக அனுமதி சீட்டு பெற வேண்டும். அனுமதிச் சீட்டை வாகன முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்ல அனுமதிக்கப்படாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டும் செல்ல வேண்டும். ஆயுதங்கள் எடுத்து செல்லக்கூடாது. வாகனங்களில் ஒலிபெருக்கி பொருத்தக் கூடாது. வழித்தடத்தில் வெடி போடக்கூடாது. சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் அச்சிட்ட பேனர்கள் கட்டிவரவோ, கோஷம் எழுப்பவோ கூடாது. அன்றைய தினம் பரமக்குடி செல்ல செப்.11ல் மட்டும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் இருந்த செல்லும் வாகனங்கள் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், நத்தம்பட்டி, அழகாபுரி, எரிச்சநத்தம், செங்குன்றாபுரம், விருதுநகர், எம்ஜிஆர் சிலை, அல்லம்பட்டி, பாலவனத்தம், அருப்புக்கோட்டை காந்திநகர், ராமலிங்கா மில், திருச்சுழி, நரிக்குடி, மங்கம்மா சாலை, சாத்தசேரி வழியாக பரமக்குடி செல்ல வேண்டும்.ஆவியூரில் இருந்து செல்லும் வாகனங்கள் காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை காந்திநகர், ராமலிங்கா மில், திருச்சுழி, நரிக்குடி, மங்கம்மா சாலை, சாத்தசேரி வழியாக பரமக்குடி செல்ல வேண்டும்.

பாண்டியன்நகரில் இருந்து செல்லும் வாகனங்கள் வில்லிபத்திரி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை காந்திநகர், ராமலிங்கா மில், திருச்சுழி, நரிக்குடி, மங்கம்மா சாலை, சாத்தசேரி வழியாக பரமக்குடி செல்ல வேண்டும். முரம்பிலிருந்து செல்லும் வாகனங்கள் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், நத்தம்பட்டி, அழகாபுரி, எரிச்சநத்தம், செங்குன்றாபுரம், விருதுநகர், எம்ஜிஆர்சிலை, அல்லம்பட்டி, பாலவனத்தம், அருப்புக்கோட்டை காந்திநகர், ராமலிங்கா மில், திருச்சுழி, நரிக்குடி, மங்கம்மா சாலை, சாத்தசேரி வழியாக பரமக்குடி செல்ல வேண்டும். செவல்பட்டியிலிருந்து செல்லும் வாகனங்கள் வெம்பக்கோட்டை, சிவகாசி, திருத்தங்கல், ஆமத்தூர், விருதுநகர், அல்லம்பட்டி, பாலவனத்தம், அருப்புக்கோட்டை காந்திநகர், ராமலிங்கா மில், திருச்சுழி, நரிக்குடி, மங்கம்மா சாலை, சாத்தசேரி வழியாக பரமக்குடி செல்ல வேண்டும்.

தொட்டிலோவன்பட்டியிலிருந்து செல்லும் வாகனங்கள் சாத்தூர், ஆர்.ஆர்.நகர், விருதுநகர், எம்.ஜி.ஆர்.சிலை, அல்லம்பட்டி, பாலவனத்தம், அருப்புக்கோட்டை காந்திநகர், ராமலிங்கா மில், திருச்சுழி, நரிக்குடி, மங்கம்மா சாலை, சாத்தசேரி வழியாக பரமக்குடி செல்ல வேண்டும்.புதூரில் இருந்து செல்லும் வாகனங்கள் பந்தல்குடி, அருப்புக்கோட்டை காந்திநகர், ராமலிங்கா மில், திருச்சுழி, நரிக்குடி, மங்கம்மா சாலை, சாத்தசேரி வழியாக பரமக்குடி சென்று, வரவேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் போலீஸ் சோதனைச்சாவடிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ உதயகுமார், கூடுதல் காவல் காண்காணிப்பாளர் முகமது அஸ்லம், நேர்முக உதவியாளர் செந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: