திருத்தங்கல் நகராட்சியில் மேலாளரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

சிவகாசி, செப். 7: திருத்தங்கல் நகராட்சி மேலாளரை கண்டித்து நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சி உள்ளது. நகராட்சியில் பணிபுரியும் மேலாளருக்கும், அலுவலர்களுக்கும் போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் பணிகளில் தோய்வு நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அலுவலர்கள், தொழிலாளர்களிடம் மேலாளர் கடுமையாக நடந்து கொள்வதாலும், அடிக்கடி மெமோ கொடுப்பதாலும் ஊழியர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அலுவலக மேலாளரை மாற்றக்கோரி நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி அலுவலகத்தின் வெளியே போராட்டம் நடத்திய ஊழியர்கள் திடீரென நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன், முன்னாள் துணைத்தலைவர் பொன்சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். நகராட்சி மேலாளரை கண்டித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: