ஒளிவு மறைவற்ற இடமாறுதல் கவுன்சலிங் நடத்த வேண்டும் கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், செப்.7: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர் கழகம் சார்பிலான ஆர்ப்பாட்டம் மகளிர் அணி மாவட்ட தலைவர் சுந்தர பிரதீபா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தில், போட்டித் தேர்விற்கான பாடத்திட்டம் அறிவித்த பின்பும் பாடங்களை நடத்த அதற்கான ஆசிரியர்கள் இல்லை. போட்டி தேர்விற்கான பயிற்சிக்கு ஆசிரியர்கள் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. ஒளிவு மறைவற்ற இடமாறுதல் கவுன்சலிங் உடனே நடத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கலைப்பிரிவுகள் துவங்கி அதற்கான ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் சீனியாரிட்டி அடிப்படையில் தலைமையாசிரியர்  பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவி பெறும் பள்ளிகளில் துறைசார்ந்த குறைகளை தீர்க்க மாதம்தோறும் பிரத்யோக குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்த வேண்டும். நிலுவையில் உள்ள தேர்வுப்பணி, மதிப்பீட்டு பணிக்கான உழைப்பூதியங்களை  உடனே வழங்கக் கோரி கோஷம் எழுப்பினர்.

Related Stories: