மூச்சுமுட்டும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி பள்ளி, கல்லூரியில் ஆசிரியர் தினவிழா

விருதுநகர், செப். 6:  விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளியில், சேர்மன் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம், முதல்வர் டாக்டர் வெர்ஜின் இனிகோ ஆகியோர் தலைமையில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. பிளஸ் 1 மாணவி சுப்ரியா ஸ்ரீ வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளிச் சேர்மன் பேசும்போது, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் பேசும்போது, ‘பள்ளி ஒரு தோட்டம் போன்றது, மாணவர்கள் விதைகளைப் போன்றவர்கள். ஆசிரியர்கள் தோட்டக்காரரைப் போல விதைகள் வளர பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.

பள்ளி மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சிகளை பிளஸ் 1 மாணவ, மாணவியர் தொகுத்து வழங்கினர். விவிவி பெண்கள் கல்லூரியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் கல்லூரி புரவலர் மகேந்திரன், கல்லூரி செயலர் ரவிசேகர் கலந்து கொண்டு ஆசிரியர்களை வாழ்த்தினர். விழாவில் மதுரை செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி கலந்து கொண்டு பேசுகையில், ‘மாணவிகள் சோதனைகளை கடந்தால்தான் சாதனைகள் படைக்க முடியும்’ என்றார். விழாவில் கல்லூரி இணைச்செயலாளர் ராதிகா வன்னியானந்தம், கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாராணி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி கல்கி பிரியா நன்றி தெரிவித்தார்.

Related Stories: