செந்துறைக்கு காவிரி நீர் கொண்டு வரக்கோரி மண்பானையில் தண்ணீரை நிரப்பி நூதன விழிப்புணர்வு பிரசாரம்

செந்துறை,செப்.5: செந்துறை பகுதிக்கு விரைவில் காவிரிநீர் கொண்டு வரக்கோரி மண்பானையில் நீரை நிரப்பி நூதன விழிப்புணர்வு பிரசாரத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தினர் ஈடுபட்டனர். செந்துறை பேருந்து நிலையம், கடைவீதிகளில் உள்ள பொதுமக்களிடம், முன்னாள் முதல்வர் காமராஜரால் உருவாக்கப்பட்ட கொண்டுவரப்பட்ட திட்டம் தான் புள்ளம்பாடி கால்வாய் திட்டம் இந்த கால்வாயின் மூலமாக ஏறத்தாழ 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த திட்டத்தின் மூலம் வினாடிக்கு 400 கன அடி நீரை எடுத்து பயன்படுத்தலாம் என பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதே போன்று செந்துறை பகுதிக்கு அரியலூர் வழியாக செந்துறை பகுதிக்கு கால்வாய் அமைத்தால், அளவுக்கதிகமாக வெள்ளம் வரும் வேளையில்  வெள்ள நீரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த இயலும். மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்தப்பகுதி மக்கள் நல்ல நீரை அருந்தும் வாய்ப்பு கிட்டும் மேலும் உப்பு நீரானது நன்னீராக மாறும் சூழல் உருவாகும்.  ஒவ்வொரு முறை வெள்ளம் வரும் போதும் விவசாயிகள் நீரை பயன்படுத்த முடியாமல் கொள்ளிடத்தில் நீர் சென்றும், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியும், பயிர்கள் அழிந்தும் அதற்காக நிவாரணம் அளிக்கும் நிலையே தொடர்கதையாகி வருகிறது.

குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இவ்வகையான பாதிப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுபட அண்டை மாநிலமான ஆந்திரா ஏராளமான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தி நீரைச் சேமித்து வருவதைப் போன்று அரசு தொலைநோக்குச் சிந்தனையோடு செந்துறை பகுதிக்கு நீரை கொண்டு வர உடனடியாக கால்வாய் அமைக்க திட்டம் கொண்டு வர வேண்டும். இந்த திட்டத்தினால் இப்பகுதி பசுமையாகும், கால்நடைகள் பெருகும், விவசாயம் சிறந்து விளங்க வாய்ப்பாக இருக்கும் என நூதன பிரசாரம் செய்த தங்க சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Related Stories: