அரியலூர் பெரிய தெரு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா முளைப்பாரி ஊர்வலம்

அரியலூர்,செப்,5: அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அமைந்துள்ள பெரியதெருவில் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நாளை (6ம் தேதி) நடைபெறுவதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக யாகசாலை அமைத்து யாகம் மற்றும் பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தெருவாசிகள் மாரியம்மன் கோயிலுக்கு  கோபுர கலசங்களையும்,  முளைப்பாரியும் கொண்டு செல்லும் விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சி அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செட்டி ஏரியிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து பெரியதெருவில் உள்ள கோயிலை வந்தடைந்தனர். பின்னர் யாகசாலையில் கோபுர கலசங்களை வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: