ராங்கியம் கிராமத்தில் விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணைய பயிற்சி

ஜெயங்கொண்டம், செப்.5: ஆண்டிமடம் வட்டார வேளாண்மை துறை மூலம் செயல்படும் மாநில விரிவாக்க உறுதுனை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) கூட்டுப்பண்ணையம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி ராங்கியம் கிராமத்தில் நடைபெற்றது.  பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சுகந்தி தலைமை வகித்தார். சோழமாதேவி கிரீடு வேளாண்மை அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார்.

உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் செயல்படும் விதம், தலைவர், செயலாளர், பொருளாளரின் கடமைகள், உறுப்பினர்களின் ஒற்றுமை, உறுப்பினர்கள் இணைந்து இடுபொருட்கள் வாங்கி பயன்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பவீனை செய்தல், வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முறைகள், வேளாண்மையுடன் வேளாண் சார்ந்த கூடுதல் வருவாய் தரக்கூடிய உப தொழில்களான மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காளாண் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற உப தொழில்களில் ஈடுபட்டு வருவாயை பெருக்குதல் குறித்து விளக்கி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் அட்மா திட்ட செயல்பாடுகளை விளக்கி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆரோக்கியராஜ், ரமேஷ் செய்திருந்தனர். இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் நித்தீஸ்வரன் நன்றி கூறினார்.

Related Stories: