திருவண்ணாமலை மாவட்டத்தில் 193 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்பெரி பயிர் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரி தகவல்

திருவண்ணாமலை,செப்.5: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 193 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிடப்பட்டுள்ளதாக பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ராமலிங்கம் தெரிவித்தார்.திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்களில் அதிகம் ஆர்வம் செலுத்துவது போன்று, பட்டு உற்பத்தியிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசாங்கம் சார்பில் பல்வேறு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மல்பெரி செடி நடவு செய்ய நடவு மானியம், சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் என்று பல்ேவறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு 350 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ராமலிங்கம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டு 350 ஏக்கர் மல்பெரி பயிரிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆகஸ்ட் மாதம் வரை 193.7 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி பயிரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மல்பெரி பயிர் சாகுபடி செய்ய புதியதாக 115 விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு பட்டு வளர்ச்சி துறை சார்பில் மல்பெரி பயிரிடும் விவசாயிகளுக்கு மாணியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க 25 ஏக்கருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டுக்கான இலக்கினை நிறைவடை விவசாயிகள் மல்பெரி பயிரிட பட்டு வளர்ச்சித்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் தற்போது அதிகபட்சமாக 40 ஏக்கர் பரப்பளவில் பட்டு உற்பத்திக்கான மல்பெரி பயிரிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: