திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்தது குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயிகள் சரமாரி புகார் கட்டாயப்படுத்தி பயிர் காப்பீடு பெறுவதாக குற்றச்சாட்டு

திருவண்ணாமலை,செப்.5: திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று நடந்த விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகள் மீது சரமாரி புகார் தெரிவித்தனர்.திருவண்ணாமலை பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆர்டிஓ தங்கவேலு தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் ஹரக்குமார், தாசில்தார் மனோகரன், பிடிஓ சஞ்சிவிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது, விவசாயிகள் பயிர் கடன் வாங்கினால், கட்டாயபடுத்தி பயிர் காப்பீடு திட்டத்திற்கான தொகையினை பிடித்தம் செய்து கொள்கின்றனர். கட்டாயப்படுத்தி பெறக்கூடாது. மாவட்டத்தில் 32 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட வில்லை. விவசாயிகளின் நலன் கருதி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேவினர்.செய்யாறு: செய்யாறு பிடிஓ அலுவலகம் பின்புறம் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ேநற்று காலை நடந்தது. இதில், பங்கேற்ற விவசாயிகள், வந்தனர். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை கண்டு கொள்ளாத அரசை கண்டித்து காதில் பூ சுற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள், சாத்தனூர் அணையில் ஷட்டர்கள் புதியதாக அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.போளூர்: போளூர் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு போளூர் ஒன்றிய அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ரா.உமாமகேஸ்வரி தலைமையில் தொடங்கியது. அப்போது விவசாயிகள், தமிழக முதல்வர் தமிழகம் முழுவதும் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகிறது என தெரிவித்துள்ளார். அது பொய்யான தகவல். பலமுறை தெரிவித்தும் ஒரு சில துறை அதிகாரிகள் தவிர குறைகளை தீர்க்கக்கூடிய அதிகாரிகள் வருவதில்லை. கூட்டத்தில் விவசாயிகள் சொல்லப்படும் குறைகளுக்கு அதிகாரிகள் பதில் தருவதில்லை. விவசாயிகள் சொல்லும் குறைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

ஆரணி: ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ஆரணி ஆர்டிஓ தண்டாயுதபாணி தலைமையில் குறைதீர்வு கூட்டம் தொடங்கியாது. இதில் விவசாயிகள், இரும்பேடு ஏரியில் ஆரணியில் உள்ள அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாய் வழியாக இரும்பேடு ஏரியில் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர் அந்த புகாரை ஏற்று உடனே நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிளித்தார்.

வந்தவாசி: வந்தவாசி பிடிஓ அலுவலக வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் என கூட்டத்தில் இருந்து வெளியேறி காதில் பூ சுற்றியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கம்: செங்கம் தாலுகாவில் நேற்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் பிடிஓ அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏரி கால்வாய் அனைத்தும் தூர் வாரபடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Related Stories: