மாணவர்கள் வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பிரசாரம்

அரியலூர்,ஆக,21:  அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் (அலகு-1)  மாணவர்கள் வாலாஜா நகரம் கிராமத்தை தேர்ந்தெடுத்து அக்கிராமத்தில் தூய்மை இயக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று அக்கிராமத்திலுள்ள பள்ளி சுவர்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களை வரைந்தனர். பின்பு கிராமத்தில் வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தும், அவற்றிலிருந்து விடுபட்டு மாற்று பொருட்களான துணி மற்றும் சணல் பொருட்களை பயன்படுத்த வலியுறுத்தியும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கருணாகரன் அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்.

Related Stories: