நாளை நடக்கிறது உலக தாய்ப்பால் வாரவிழா

அரியலூர், ஆக. 2: அரியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி பேசியதாவது: குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சியுள்ள குழந்தையாக பிறக்கும். அறிவுத்திறன் மேம்பாடுள்ள குழந்தையாக இருக்கும். தாய்மார்கள் தாங்கள் இழந்த சக்தியை திரும்ப பெற வழிவகுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டாகும் என்றார். மருத்துவ அலுவலர் நிரஞ்சனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகில், சமுதாய செவிலியர் முருகேஸ்வரி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பின்னர் பொதுமக்களுக்கு தாய்பாலின் சிறப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Related Stories: