அரியலூருக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகள்

அரியலூர், ஜூலை 20: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அரியலூர் மாவட்டத்துக்கு புதிய மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரத்துக்காக 800 கட்டுப்பாட்டு கருவிகள் நேற்று வந்தன. இந்த கருவிகளை பார்வையிட்டு கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக அரியலூர் மாவட்டத்துக்கு புதிய மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரத்துக்காக 80 பெட்டிகளில் 800 கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டன. இந்த இயந்திரங்கள் தாசில்தார் முத்துகிருஷ்ணன்  மூலம் அரியலூர் மாவட்டத்துக்கு எடுத்து வரப்பட்டது. இந்த இயந்திரங்கள் அரியலூர் கலெக்டர்  அலுவலக பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார்.

Related Stories: