கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்

ஜெயங்கொண்டம், ஜூலை 7: ஜெயங்கொண்டம் அருகே இளையபெருமாள் நல்லூர் கிராமத்தில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை கைலாசநாதர் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளது. கோயில் திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கின். இதற்காக யாகசாலை பூஜைகள்  கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது.

இதன்படி சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து இருந்த புனிநீர் கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்து, பரிவார தெய்வங்களான விநாயகர், ஆனந்தவல்லி அம்பாள் பிரகாரங்களின் மூலஸ்தான விமானத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் செய்தனர். அதைதொடர்ந்து காசிவாசி முத்துக்குமார சுவாமி தம்பிரான் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கைலாசநாதர் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

Related Stories: