மாவட்டத்தில் முதன்முறை இடையத்தான்குடி அரசு பள்ளியில் ஸ்கைப் வகுப்பு துவக்கம்

அரியலூர், ஜூலை 7:  அரியலூர் மாவட்டம் இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்டத்தில் முதன்முறையாக ஸ்கைப் வகுப்பு துவக்க விழா நடந்தது. ஆண்டிமடம் வட்டார வளமையத்தில் இருந்து இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்கைப் வகுப்புகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி துவக்கி வைத்தார். பின்னர் 6,7, 8ம் வகுப்பு மாணவர்களுடன் ஸ்கைப் மூலம் ஆங்கிலத்தில் கலந்துரையாடினார்.இதைதொடர்ந்த்து அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரும் தங்களது அறிவு திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறுமுற்சிகளை எடுத்து வரும் அமெரிக்கா வாழ் தமிழரான கவிதாபாண்டியன் தலைமையிலான குழுவினர், மாணவர்களுடன் ஸ்கைப் மூலம் கலந்துரையாடினார். மேலும் மாணவர்களுக்கு பொதுஅறிவு சார்பான பாடங்களை தினமும் அமெரிக்காவில் இருந்து ஸ்கைப் மூலம் வழங்கவுள்ளனர். விழாவில் அரியலூர், செந்துறை கல்வி மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆண்டிமட வட்டார வளமைய மேற்பார்வையாளர் பங்கேற்றனர்.

Related Stories: