பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி

மணிலா: தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில்  பயணிகள் படகு ஒன்று இரவில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் அந்த படகில் பயணித்த 31 பேர் உடல்  கருகி பலியாகினர். படகில் உயிர் தப்பியவர்களை  கடலோர காவல்படை, மீனவர்கள் இணைந்து படகில் இருந்து மீட்டனர்.

MV லேடி மேரி ஜாய் 3 அந்நாட்டு நேரப்படி 22:40 மணியளவில் (14:40 GMT) பசிலன் மாகாணத்தில் உள்ள பலுக்-பலுக் தீவில் தீப்பிடித்தது. அது வேறொரு தீவுக்குப் பயணித்துக் கொண்டிருந்ததாக பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக கடலோர காவல்படையினர் கூறியுள்ளார்.

லேடி மேரி ஜாய் 3 என்ற கப்பல் 240 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் செல்ல அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் கப்பலில் மேனிஃபெஸ்ட்டில் இல்லாத மற்றவர்கள் இருந்ததாக கடலோர காவல் அதிகாரி ரெஜார்ட் மார்ஃப் கூறினார்.இதனால் படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அதிகாரிகளால் தீர்மானிக்க முடியவில்லை.

பிலிப்பைன்ஸில் கடல் வழியாகப் பயணம் செய்வது மலிவான போக்குவரத்து முறையாகும், மேலும் கடல் விபத்துக்கள் ஓரளவுக்கு வழக்கமாக நடக்கின்றன. கடந்த ஆண்டு, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் கிழக்கே உள்ள பொலிலோ தீவில் இருந்து 124 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

Related Stories: