குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 7,381 இடங்களை நிரப்ப தமிநாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுகளை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தியது.

இதுவரை இல்லாத வகையில் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர். குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகாததால் தேர்வர்கள் கடும் அதிர்ப்தியடைந்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள நிலையில் விரைந்து தேர்வு முடிவுகளை அறிவிக்க தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தேர்வு அறிவிக்கப்பட்டபோது 7,381ஆக இருந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: